மனிதம் மரணிக்கவில்லை!!!!!
உதகை பிங்கர் போஸ்ட் பாலிடெக்னிக் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சென்றதில் படுகாயம் அடைந்த நாயினை எமரால்ட் ஹைட்ஸ் மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் கண்டவுடன் உடனடியாக விபத்துக்குள்ளான நாயை மீட்டு விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பினருக்கு (NSPCA) தகவல் தெரிவித்து அதனை அவர்களிடம் ஒப்படைத்தனர். வேகமாக நகரும் காலத்திலும் நின்று அதுவும் உயிர் தான் அதற்கும் வேதனை உண்டு என்று உணர்ந்த மாணவிகளின் செயல் அனைத்து தரப்பினரின் பாராட்டுதல்களை பெற்றுள்ளது. இச்செயலால் கல்லூரியின் பேராசிரியர்களுக்கும் கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட புகைப்பட கலைஞர்கள் என் வினோத்குமார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக