அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் அவருடைய மனைவி வெட்டிக் கொலை போலீசார் விசாரணை! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மற்றும் அவருடைய மனைவி வெட்டிக் கொலை போலீசார் விசாரணை!


திருப்பத்தூர்,பிப் 7 - 

திருப்பத்தூர்  அருகே மனைவி படுகொலை, திமுக துணைத்தலைவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதி! மர்ம நபர்கள் வெறிசெயல்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்தமேற்கத்தியனூர் கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (வயது 50) ஊராட்சி மன்றத் துணைத் தலைவ ராகவும் மற்றும் திமுக துணை தலை வராகவும் உள்ளார். அவருடைய மனைவி வசந்தி (வயது 40) ஆகிய இருவரும் நேற்று வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும்  சரா மாறியாக வெட்டி  உள்ளனர். இதனால் இருவரும் கத்தி கதறி உள்ளனர் இதனால் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரும் போதுஅங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர் 
இதனால் வீட்டிலேயே வசந்தி ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார் மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதி போராடி இருந்த நிலையில் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சையாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளதாகவும் இந்த நிலையில் இரண்டு நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாகவும் மேலும் 
இந்த நிலத்திலிருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று கேட்டு வந்த நிலையில் இன்று அந்த வழிக்கான ரிஜிஸ்ட்ரேஷன் நடக்கவிருந்த நிலையில் இன்று மர்ம நபர்களால் திருப்பதி மற்றும் அவருடைய மனைவி வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் நிலப் பிரச்சனை சம்பந்தமாக வெட்டி கொலை செய்யப் பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? மேலும் குற்றவாளிகள் யார் என்று? போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad