திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 11ம் தேதி தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி பக்தர்கள் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி முன்னேற்பாடுகள் குறித்து திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனர். 100க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும், 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பாதயாத்திரை ஆக வரும் பக்தர்கள் எளிமையாக தரிசனம் செய்த தனி வழி கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பாதயாத்திரை வரும் பக்தர்களின் கையில் டேக் கட்டி விட இருப்பதாகவும், பக்தர்களின் வசதிக்காக மருத்துவ முகாம், தற்காலிக வாகன நிறுத்தும் இடம் செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கூட்டத்தில் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையாளர் ஞானசேகரன், நகராட்சி ஆணையர் கண்மணி, திருச்செந்தூர் வட்டாட்சியர் பாலசுந்தரம், அரசு தலைமை மருத்துவர் பாவநாச குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பர்வீன் உட்பட அனைத்து அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக