புதிய பேருந்துகளை துவங்கிவைத்தார் மாநகர மேயர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 பிப்ரவரி, 2025

புதிய பேருந்துகளை துவங்கிவைத்தார் மாநகர மேயர்


புதிய பேருந்துகளை துவங்கி வைத்தார் மாநகர மேயர்


கழகத்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.S.S.சிவசங்கர் அவர்களின் வழிகாட்டுதலின் படி குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 505 குளச்சல் - மதுரை வழிதடத்திற்கு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய பேருந்தினை  வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் குளச்சல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.பிரின்ஸ் MLA அவர்களுடன் கொடியசைத்து துவங்கி வைத்து. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களும் மாவட்ட பொறுப்பு அமைச்சர் காலநிலை மாற்றம் மற்றும் நிதித்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களுக்கும் நன்றி கூறினார். உடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் கிளை மேலாளர்,குளச்சல் நகர்மன்ற தலைவர் திரு.அ.நசீர்,குளச்சல் நகர செயலாளர் திரு.நாகூர்கான்,மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர்கள் திரு.ரூபன், திரு.சிபு, தொ.மு.ச தங்கராஜ்,குளச்சல் தொகுதி ஐடி விங் ஒருங்கிணைப்பாளர் திரு.குமரி மணிமாறன் மற்றும் குளச்சல் நகர்மன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் தொ.மு.ச பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad