காமராஜர் கல்வெட்டு சூறையாட பட்டத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
குமரி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக தந்து பல அணைகளைக் கட்டி குமரி மக்களின் நீர் ஆதாரத்தை அதிகரித்தும், மாவட்டத்தின் ஒரு அடையாளமாய் திகழும் மாத்தூர் தொட்டி பாலத்தை மக்களுக்காக கட்டித்தந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவர்களில் ஒருவருமான பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்களுடைய கல் வெட்டானது மாத்தூர் தொட்டில் பாலத்தில் கயவர்களால் உடைத்து சூறையாடப்பட்டிருக்கிறது.
எனவே உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து மேற்படி குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு தமிழக வெற்றிக் கழகம் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் திரு.S.R.மாதவன் அவர்களின் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் இணைச் செயலாளர் பிரேம்குமார், துணை செயலாளர் சாலமன், நாகர்கோவில் மாநக நிர்வாகி சிவன்விஜய், மாவட்ட நிர்வாகி சுந்தர்ராஜ்,பிரடி, தோவாளை ஒன்றிய நிர்வாகி அனிஷ், கோகிலா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு ராம்சுந்தர், மற்றும் கௌஷல், மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக