நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திராநகர் என்னும் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி கண்ணன் என்பவர் சட்டத்திற்கு புறம்பான முறையில் மின் வேலி அமைத்ததில் அதே ஊரைச் சார்ந்த முருகன்(47)என்பவர் பணி முடிந்து இரவு நேரத்தில் வீடு திரும்பும் போது மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து எமரால்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த எட்டு வருடங்களாக உதகை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது இந்நிலையில் நேற்றைய தினம் குற்றவாளி கண்ணன் என்பவருக்கு ஒரு வருட கால சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உதகை குற்றவியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக