மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட பிங்கர் போஸ்ட் பகுதி அருகாமையில் உள்ள பட்பயர் என்னும் பகுதியில் நமது தமிழ்நாடு பேரிடர் தங்கியுள்ளனர். இவர்கள் 07 02 2025 (வெள்ளிக்கிழமை) இன்று நீலகிரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் மழைக்காலங்களிலும் மிகப்பெரிய புயல்களிலும் மிகப்பெரிய நிலச்சரிவுகளிலும் சிக்கிக் கொள்ளும் பொதுமக்கள்களை எவ்விதமாக அப்பகுதியில் இருந்து மீட்டெடுப்பது என்று அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை வைத்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர். இதன் தலைமையிடம் சென்னையில் உள்ள ஆவடி பகுதியில் அமைந்துள்ளது. இவர்கள் இளம் வயது காவலர்களை வைத்து பேர் கொண்ட குழு 18 அணிகளாக செயல்பட்டு வருகின்றனர் இவர்கள் மலைக்காலங்களில் அதிவிரைவில் சேதம் அடையும் பகுதிகளான ஊட்டி கொடைக்கானல் போன்ற பகுதிகளில் தனது அணிகளை அவ்விடத்திற்கு அழைத்துச் சென்று இதுபோன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய பேரிடர் மீட்பு குழு இல்லையென்றால் பொதுமக்கள் மிகப்பெரிய இடையூறுகளில் சிக்கிக் கொள்வார்கள் எனவே இத்தகைய மீட்பு படையினர் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு பாதிப்புகளில் ஏற்பட்ட பொதுமக்களை காப்பாற்றியுள்ளார்கள்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக