மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ஜெயின் சங்க கட்டிடத்தில் 90 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு கல்யாணசுந்தரம்,சுப்ரமணியன்,ஜெயராமன்,பஜல் ரஹ்மான் என நான்கு பேர் போட்டியிட்டனர். 1474 உறுப்பினர்களில் 1329 உறுப்பினர்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர்.
மாலை ஆறு மணிக்கு வாக்குகள் ஆறு சுற்றுகளாக சட்ட ஆலோசகர் சுந்தரய்யா தலைமையில் கோடங்குடி சங்கர், முத்து கருப்பன், ரஜினி துரைராஜ்,கியான்சந்த், பாஸ்கரன், திருநாவுக்கரசு உள்ளிட்ட 7 பேர் கொண்ட தேர்தல் பொறுப்பாளர்கள் குழு முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முதல் சுற்றிலிருந்து தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களைவிட கூடுதல் வாக்குகள் பெற்று கல்யாணசுந்தரம் முன்னிலை பெற்றார்.ஆறாவது சுற்று முடிவில் கல்யாணசுந்தரம் 634 வாக்குகளும்,சுப்ரமணியன் 621 வாக்குகளும்,பஜல் ரஹ்மான்45 வாக்குகளும் ஜெயராமன் 18 வாக்குகளும் பதிவான நிலையில் தன்னுடன் போட்டியிட்ட சுப்ரமணியனை விட 13 வாக்குகள் அதிகம் பெற்று கல்யாணசுந்தரம் வெற்றி பெற்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக