சாலை ஓரத்தில் நிருத்தி வைக்கும் வாகனங்களால் பொதுமக்களுக்கு இடையூறு
நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் அமைந்துள்ள தனியார் இருசக்கர வாகன ஷோரூம்களுக்கு இருசக்கர வாகனங்களை கொண்டுவரும் கண்டைனர் லாரிகள் பால் பண்ணை அருகாமையில் உள்ள சாலைகளில் நிறுத்தி செல்வதால் பக்கத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மாணவிகள் பெற்றோர்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் சாலைகளில் ஓரங்களில் நடந்து செல்ல வழி இல்லாததால் அவர்கள் சாலை வழியாக நடந்து சொல்லுகின்றனர் இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்பபுள்ளது. ஆகவே அசம்பாவிதங்கள் எதுவும் நடப்பதற்கு முன்பு போக்குவரத்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மற்றும் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்..
காலை 8 மணி க்கு மேல் சிற்றிக்குள் கனரக வாகனங்கள் வரக்கூடாது என காவல்துறை எச்சரித்தும் அந்த பகுதியில் கனரக வாகனங்கள் காலை மாலை வேலைகளில் வாகனங்களை அதில் நிறுத்தி இருசக்கர வாகனங்களை இறக்கி வருகின்றனர் இதை இவர்கள் வாடிக்கையாகவைத்துள்ளனர். மேலும் போலீசார் வைத்திருக்கும் தடுப்பு அருகில் வாகனங்களை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது..
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக