நீலகிரி மாவட்டகூடுதல் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம். நடைபெற்றது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

நீலகிரி மாவட்டகூடுதல் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம். நடைபெற்றது.


நீலகிரி மாவட்டகூடுதல் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம். நடைபெற்றது. 


நீலகிரி மாவட்டம் உதகை கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் நுகர்வோர் குறைகளை களையும் வகையில்  3 மாதங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெறுகிறது. இதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. 


கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமை தாங்கினார். 


மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


கூட்டத்தில் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் அஜித், 


குன்னூர் பாதுகாப்பு சங்கத் தலைவர் மனோகரன், கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் நாகேந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியம், புளுமாவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் வாசுதேவன், செயலாளர் முகமது சலீம், நிர்வாகி இஸ்மாயில், உதகை நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நுகர்வோர் குறைபாடுகளை சுட்டி காட்டி பேசினர்.


தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் பேசும்போது நுகர்வோர் குறைகளை களைய அனைத்து துறைகளும் தவறாமல் 3 மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் அமைப்புகளை அழைத்து கூட்டம் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நுகர்வோர் அமைப்புகள் சுட்டி காட்டும் குறைகள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 45 நாளில் ஆய்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.


தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் பேசும்போது நுகர்வோர் அமைப்புகள் மக்களின் குறைகளை சுட்டி கட்டுகின்றனர். அதன்மீது அவ்வப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும். குன்னூர் கோத்தகிரி சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும் கோத்தகிரி பேருந்து நிலையத்தின் அருகே பார்க்கிங் வசதி ஏற்படுத்த வேண்டும். கூடலூர் நகரில் மாற்று சாலை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நெடுஞ்சாலை துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  போக்குவரத்து கழத்தில் உள்ள பழைய பேருந்துகள் மாற்றி அமைக்கவும் பொதுமக்கள் தேவைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கவும் உரிமையாளர்களுக்கு கூடுதல் அபரதங்கள் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோரங்களில் போடப்படும் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad