தைப்பூச திரு விழாவையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் திருச்செந்தூர் முழுவதும் திருவிழாக்கோலம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

தைப்பூச திரு விழாவையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் திருச்செந்தூர் முழுவதும் திருவிழாக்கோலம்.

தைப்பூச திரு விழாவையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர் நகர் முழுவதும் திருவிழாக்கோலம். 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் முக்கியமானது. அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில், இருந்தும் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். தூத்துக்குடி ,நெல்லை ,கன்னியாகுமரி, தென்காசி ,உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சாரை சாரையாக பாதயாத்திரை வந்தவண்ணம் உள்ளனர். 

ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் நகர் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகர் முழுவதும் பக்தர்களின் தலையாகவே காட்சியளிக்கிறது. 

பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோயில் தக்கார் அருள்முருகன் மற்றும் அறங்காவல் துறையினர் செய்துள்ளனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad