நெடுகுளா ஶ்ரீ ஜெடையசுவாமி குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நெடுகுளா ஹட்டியில் மலைமேல் அமைந்துள்ள இந்திய சுதந்திரத்திற்க்கு முன்பிருந்து இருக்கும் பழமைவாய்ந்த ஶ்ரீ ஜெடையசுவாமி திருக்கோயில் கடந்தாண்டு புனரமைக்கப்பட்டு சிறப்பர காட்சியளிக்கும் கோயிலில் குண்டம் திருவிழா பிப்ரவரி 10 திங்கட்கிழமை அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்க்கான ஏற்பாடுகளை நெடுகுளா ஊர்தலைவர் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். இன்று பிப்ரவரி 11 செவ்வாய்க்கிழமை ஐய்யன் அருளால் பானையில் தானாகவே உருவாகும் திருநீர் திருவிழா (கப்பு இக்குவ ஹப்ப) நடைபெறுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K. A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக