திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் போலி நகை அடகு மோசடியில் ஈடுபட்ட கும்பல் மற்றும் கும்பலின் தலைவன் கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் போலி நகை அடகு மோசடியில் ஈடுபட்ட கும்பல் மற்றும் கும்பலின் தலைவன் கைது.

 


திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் போலி நகை அடகு மோசடியில் ஈடுபட்ட கும்பல் மற்றும் கும்பலின் தலைவன் கைது.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் 4 முறை சுமார் 42 பவுன் போலி நகைகளை அடமானம் வைத்ததன் மூலமாக ரூபாய் 15,72000 பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக திருப்புவனம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த ஈஸ்வரி (38) உள்ளிட்ட மூன்று பேர் மீது பிஎன்எஸ் 316(2), 318(2), 318(4) ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தொடர்ச்சியாக மானாமதுரையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இக்கும்பல் இரு தினங்களுக்கு முன்பு போலி நகை அடகு மோசடியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது இக்கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட மதுரை திலகர் திடலை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செந்தில்குமார் மீது நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் மதுரை மாநகர், திலகர் திடல் மற்றும் மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில், மானாமதுரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad