சமூக வலைத்தளங்களில் ரத்த காயத்துடன் கூடிய பள்ளி மாணவர்களின் புகைப்படங்கள், தலைமையாசிரியர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

சமூக வலைத்தளங்களில் ரத்த காயத்துடன் கூடிய பள்ளி மாணவர்களின் புகைப்படங்கள், தலைமையாசிரியர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?


சமூக வலைத்தளங்களில் ரத்த காயத்துடன் கூடிய பள்ளி மாணவர்களின் புகைப்படங்கள், தலைமையாசிரியர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பிடாவூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர்களை தட்டிக் கேட்ட தலைமை ஆசிரியரையே மாற்ற கோரி வட்டார கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர் புகார் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் இரண்டு ஆசிரியர்கள் என மொத்தம் மூன்று பேர் பணியாற்றி வரும் நிலையில், குறிப்பாக கணித ஆசிரியர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவர்களை அடித்து ரத்தக்காயம் ஏற்படுத்தியுள்ளார். உடனடியாக இது குறித்து தலைமையாசிரியர் சொர்ன காந்தி வட்டார கல்வி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்பொழுது காயம் ஏற்பட்ட மாணவனின் ரத்த காயத்துடன் கூடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கிராம பொதுமக்களிடம் கேட்டபோது, இங்கு பணியாற்றும் இரண்டாம் நிலை இடைநிலை ஆசிரியர் ரவிக்குமார் மற்றும் உமா ஆகியோர் ஜாதி ரீதியாக தலைமையாசிரியரை துன்புறுத்துவதாகவும், இப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியர்கள் அடிக்கடி வேறு இடத்திற்கு பணிமாற்றம் வாங்கி செல்வதாகவும், குறிப்பாக இப்பள்ளியில் 15 வருடங்களுக்கு மேலாக அடுக்கடுக்கான பல்வேறு குற்றச்சாட்டுகளை ஏற்பட்டும் ஆசிரியர்களை மட்டும் மாற்றம் செய்யாதது தங்களுக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, இச்சம்பவம் குறித்து உடனடியாக முறையான விசாரனை மற்றும் துறை ரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் முன்வர வேண்டும் எனவும் கிராம பொதுமக்கள் கோரிக்கையை முன்வைத்து வலியுறுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad