கல்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பரிசுகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை கல்குறிச்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் பேரூராட்சி தலைவர் துரை.ராஜாமணி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, நகர்மன்ற துணைத் தலைவர் பாலசுந்தரம், கல்குறிச்சி கிளைச் செயலாளர் சசிகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யாஸ்மின் சஞ்சய், பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் கனகலட்சுமி முத்துராமன், பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் ரோஸ்லின், பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு, பள்ளி ஆசிரியப் பெருமக்கள், பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக