மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 6 பிப்ரவரி, 2025

மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக வட்டத் தலைவர் திரு தர்மராஜன் அவர்களின் தலைமையிலும் முன்னிலையிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலக உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. 


இதில் 1. கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் முறை ஊதியம் வழங்க வேண்டிய கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றிக் கொடுக்க முன்வராத பொது நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம உதவியாளர்களை அரசு ஊழியர்களின் பட்டியலில் தீ பிரிவில் சேர்த்திட வலியுறுத்தியும், 


2. கிராம உதவியாளர்கள் இறந்துவிட்டால் அந்த குடும்பம் வாழ வழி தெரியாமல் தவிர்க்கும் என்பதை புரிந்து கொண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் 1990-ம் ஆண்டு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்கினார். கடந்த 23 ஆண்டு காலம் பயன் பெற்று வந்த வாரிசு வேலையை மீண்டும் வழங்க வேண்டி வலியுருத்தியும், அரசு ஆணை 33/2023 ரத்து செய்ய கோரியும், 


3. கடந்த 2007-க்கு பிறகு பணிக்கு வந்த சிபிஎஸ் திட்டத்தில் பணி பார்த்து ஓய்வு பெற்று இறந்துபோன கிராம உதவியாளரிடம் பிடித்தம் செய்த தொகையையும் அதற்குண்டான அரசு பங்கீடும் இதுநாள் வரை வழங்காமல் இருப்பதை வழங்க வலியுறுத்தியும், 


4. புதிதாக பணியில் சேர்ந்து கிராம உதவியாளர்கள் சிபிஎஸ் தற்காலிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே சிபிஎஸ் எண் நிரந்தரமாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 


5. கிராம உதவியாளர்களை கிராம பணி பார்ப்பதற்காக பணி அமர்த்தப்பட்டவர்களை கிராம பணியைத் தவிர பல்வேறு மாற்றுப்பணிகளுக்கு பயன்படுத்தி வருவதை தவிர்க்க வேண்டும் என்று அன்றைய வருவாய் நிர்வாக ஆணையர் அவர்கள் போட்ட உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் மாற்று பணிகளுக்கு பயன்படுத்துவதை நிறுத்திட உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழ்நாடு அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டது.


இந்நிகழ்வில் மானாமதுரை வட்டார அளவிலான தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad