திருச்செந்தூர் கடற்கரை பகுதிகள் கடந்த சில மாதங்களாகவே அவ்வப்போது உள்வாங்கி காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் மிகப்பெரிய அளவில் உள்வாங்கி காணப்பட்டு வருகிறது. உடன்குடி அனல் மின் நிலையம் அமைப்பதற்காக கடல் வழியை நிலக்கரி இறக்குமதி செய்யும் தளம் அமைப்பதால் தான் இவ்வாறு கடல் உள்வாங்கி காணப்படுகிறது என பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
மேலும் உடன்குடி குலசேகரப்பட்டினம் பகுதிகளில் கடல் அரிப்பு ஏற்பட்டு பனை மரங்கள் வேரோடு சாய்ந்தது என பல்வேறு தரப்பில் இது குறித்து பேசப்பட்டு வந்தது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஊடகங்களிலும் பல்வேறு விதமான அறிவிக்கைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
எனவே கடல் அரிப்பையும் உள்வாங்கி வருதலை தடுக்கவும் தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில், கடல் வழியே நிலக்கரி இறக்குவதை கைவிட்டு ரயில் மூலமாக நிலக்கரி இறக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் உடன்குடியில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சிகளின் மாவட்ட செயலாளர் டிலைட்டா ரவி துணை பொது செயலாளர் ஆற்றல் அரசு, மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் தமில்குட்டி தமிழ் பரிதி சங்க தமிழன் தமிலவானன் வெற்றி வேந்தன்
புரட்சியாளன் லாசர் ரமேஷ் செல்வகுமார் சங்கர் மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்தில்
50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக