தார் சாலையை தோண்டி சரிவர மூடாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதி.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையம் அருகில் மேல ஆசாரிப்பள்ளம் இணைப்புச் தார் சாலையை டெலிபோன் டிபார்ட்மென்ட் ஊழியர்கள் சில நாட்களுக்கு முன்பு தோன்டி பின்னர் பணிகள் முடிந்த பிறகு சாலையை சரிவர மூடாமல் குண்டும் குழியுமாக அப்படியே போட்டுவிட்டு சென்றுள்ளனர் .மேலும் பெரிய பெரிய கற்கள் சாலையில் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து மாவு கட்டு போடும் நிலை ஏற்ப்பட்டு வருகின்றது. சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக