குடியாத்தம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க குடியாத்தம் கிளை சார்பில் இரத்த தானம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 பிப்ரவரி, 2025

குடியாத்தம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க குடியாத்தம் கிளை சார்பில் இரத்த தானம்!

குடியாத்தம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்க குடியாத்தம் கிளை சார்பில் இரத்த தானம்!

வேலூர் , பிப் 24 -
தேசிய அறிவியல் தினத்தினை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குடியாத்தம் கிளை மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க இரத்ததான கழகம் இணைந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை இரத்த வங்கிக்கு இரத்த தான முகாம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

அறிவியல் இயக்கத்தின் தலைவர் கோ.தினகரன், செயலாளர் நல்நூலகர் ஆ.ச.மதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  முன்னதாக மாவட்ட துணைத்தலைவர் பேராசிரியர் வே.வினாயகமூர்த்தி வரவேற்று பேசினார்.  இரத்த தான கழகத்தின் பி.ஜெயக்குமார், கே.ருத்ரவேல், ஆகியோர் ஒருங்கிணைந்ததனர்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ரா.காயத்ரி, கவிஞர்.முல்லைவாசன், கவிஞர் முல்லை வாசன், ஆகியோர் பேசினர்.
என்.லெனின், சையத் அலிம், ஆகியோர் முன்னிலை வகித்தனர் கவிஞர் சகுவரதன், தினேஸ்குமார் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.  அக்குவா வாட்டர் எஸ்.கேசவன், ஜிசிடிவியினர் மாவட்ட செயலாளர்செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அலுவலர் மாறன்பாபு ரத்த தானம் செய்த அனவைருக்கும் சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.  வழக்கறிஞர் சம்பத்குமார், மருத்துவர் பியுலா உள்ளிட்டோரும் பாராட்டினர். 
ரத்த தான முகாமில் 21 நபர்கள் கொடை வழங்கினர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் முபிக்கியராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad