இராமநாதபுரம் மாவட்டம் வாக்கு பதிவு மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், மாவட்ட ஆட்சித் தலைவர், ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் இந்திய தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கு வளாகத்தில் உள்ள இராமநாதபுரம்,முதுகுளத்தூர், திருவாடானை,பரமக்குடி (தனி)ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அறையினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன், பாதுகாப்பு தன்மை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன், வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிக்ச்சியின் போது இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜமனோகரன், வட்டாட்சியர்கள் (தேர்தல்) முருகேசன், சுவாமிநாதன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக