அயனாவரம் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் தானிஷ் அகமது கல்லூரி சார்பாக கல்வி ஊக்கத்தொகை நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

அயனாவரம் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் தானிஷ் அகமது கல்லூரி சார்பாக கல்வி ஊக்கத்தொகை நிகழ்ச்சி


அயனாவரம் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் தானிஷ் அகமது கல்லூரி சார்பாக கல்வி ஊக்கத்தொகை நிகழ்ச்சி


அயனாவரம் எஜிகேஷனல் டிரஸ்ட், மற்றும் தானிஷ் அகமது இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கோவை இணைந்து கூடலூர்  ஜி டி எம் ஒ  பள்ளி வளாகத்தில்  மாபெரும் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக   மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வசந்த  குமார், தானிஷ் அகமது இன்சிடியூட் ஆஃப் டெக்னாலஜி முதன்மை நிர்வாக அதிகாரி தமிஷ்அகமது, டேனிஷ் அஹமத் கல்லூரியின் அட்மிஷன் ஆபிஸர்  முகமது ஜாஃபர், அயனாவரம் அறக்கட்டளை கூடலூர் ஒருங்கிணைப்பாளர்  யூஜின் பிராங்கோ,  st. தாமஸ் பள்ளியின் தலைமை ஆசிரியர்  பிரான்சிஸ் சேவியர், ஜி டி எம் ஓ  பள்ளி தலைமை ஆசிரியர்  அப்துல் மாலிக் மேலும் சுரேஷ் ரமணா மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு தலைவர், ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் 22 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்துக் கொண்டனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் சமூகப் பணியில்  தன்னார்வலர் தொண்டு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன மற்றும்  சிறந்த ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவின் ஏற்பாட்டினை அயனாவரம் எஜிகேஷனல் டிரஸ்ட் செய்திருந்தது. நிகழ்ச்சியில்  தில்ஷத்  அனைவரையும் வரவேற்றார். ரம்யா நன்றி கூறினார். நிகழ்ச்சியை தமிழியக்கம் மாவட்ட  செயலாளர் புலவர் இர.நாகராஜ் தொகுத்து வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad