உதகை கூடலூர் சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து.
நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து கூடலூர் சென்ற லாரி தவளைமலை அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவற்றில் மோதி சாலையில் கவிழ்ந்தது. ஓட்டுனர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சிறு வாகனங்கள் கல்லட்டி வழியாக அனுமதிக்கப்படுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக