உளுந்தூர்பேட்டை சுப்பிரமணியசாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த தண்டாயுதபானி சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூசம் திருவிழாவை ஒட்டி இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் பக்தர்கள் திரண்டு வந்து தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு வந்தனர் அதிகாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு ராஜ அலங்காரத்தில் காட்சி அளித்த சுப்பிரமணிய சுவாமியை உளுந்தூர்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர் இன்று இரவு மகா தீபாரதனை நடைபெற்றது அதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்த நிலையில் முருகப்பெருமானை வழிபட்டனர் மேலும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்தியையும் பக்தர்கள் வழிபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழக குரல் D.செல்வம் உளுந்தூர்பேட்டை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக