விளாத்திகுளத்தில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

விளாத்திகுளத்தில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா.

விளாத்திகுளத்தில் 200 கர்ப்பிணி பெண்களுக்கு 
சமுதாய வளைகாப்பு விழா ஜீ.வி. மார்க்கண்டேயன் எம் எல் ஏ பங்கேற்பு

விளாத்திகுளத்தில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் ஜிவி மார்க்கண்டேயன் எம் எல் ஏ கலந்து கொண்டார். விளாத்திகுளம் மற்றும் புதூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள 200- கர்ப்பிணி பெண்களுக்குசமுதாய வளைகாப்பு விழா விளாத்திகுளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது 

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜீ.வி.மார்கண்டேயன் கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு சேலை மஞ்சள் குங்குமம் வளையல் பூ மற்றும் வளைகாப்புக்கு தேவையான பொருட்களை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் கர்ப்பிணி பெண்களுக்கு 7வகை சாப்பாடு வழங்கும் திட்டத்தை மார்க்கண்டேயன் எம் எல் ஏதொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பொறுப்பு ரூபி பெர்னாண்டோ குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரளாதேவி விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருணா சந்திரசேகர் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அரவிந்த் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பு செந்தில்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் முத்துலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad