சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 மார்ச், 2025

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் !



திருப்பத்தூர் , மார்ச் 25 -  

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு அவர்களின் தலைமையில் இன்று (25.03.2025) திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய எல்லைகுட்பட்ட Podhigai Engineering கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.     
இந்த கூட்டத்தில்  POCSO, இணையவழி குற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெருகிவரும் சைபர் குற்றங்களான டிஜிட்டல் கைது மோசடி (தங்களை காவல்துறையினர் Digital arrest செய்து இருப்பதாக கூறி பணம் பறித்தல்), TASK மோசடி( டாஸ்க் செய்தால் அதிக பணம் தருவதாக கூறி) , online trading மோசடி, online investments மோசடி (சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி), ஏதேனும் அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான சமூகவலைதள குற்றங்கள் பற்றியும்,  அந்த குற்றங்களில் இருந்து  தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறை கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து போதைப் பொருட் களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இணையவழி புகார் உதவி எண்: 1930 , பெண்கள் பாதுகாப்பு உதவி எண்: 181, குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி எண் : 1098, மற்றும் மதுவிலக்கு தொடர்பான புகார் உதவி எண் :10581 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, துண்டு பிரச்சாரங்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர் மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad