திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 மார்ச், 2025

திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.


திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.



மதுரை தெற்கு மாவட்ட திமுக சார்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு மார்ச்-1 அன்று திருமங்கலம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு மதுரை தெற்கு மாவட்ட  செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் அவர்கள் தலைமையில் தங்க மோதிரம் அணிவித்து குழந்தைகளுக்கு தேவையான (பேபி கிட்ஸ்) பொருட்கள் வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராம்குமார் மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், நகர் மன்ற செயலாளர் மூ.சி.சோ.ஶ்ரீதர், நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், இளைஞர் அணி செயலாளர் விமல், ஹரி கிருஷ்ணன்,தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், வழக்கறிஞர் பிரிவு கவி,மற்றும் கட்சி நிர்வாகிகள் கழக முன்னோடிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad