இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய நியாயவிலைக் கடை மற்றும் நீர் தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 4 மார்ச், 2025

இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய நியாயவிலைக் கடை மற்றும் நீர் தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய நியாயவிலைக் கடை மற்றும் நீர் தேக்க தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.



சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் கோ. இடையன்வலசையில் புதிய நியாயவிலை கடை, இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் அ. மெய்யனேந்தல் கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை மற்றும் இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதீப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வெங்கட்ராமன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்கத் தலைவர் சுப. தமிழரசன், ஒன்றிய அவைத் தலைவர் மலைமேகு, மாவட்ட பிரதிநிதிகள் ராஜபாண்டி, அய்யாசாமி, சேதுபதிதுறை, விளையாட்டு மேம்பாட்டு அணி பாலசுந்தர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சண்முகம், ராஜபாண்டி, காளிமுத்து, நீலமேகம், சிவனேசன், சாரதி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்  லெனின், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா பிரசாத், அரசு அலுவலர்கள், பொறியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad