கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர்


கோரிக்கை மனுவை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சிக்கு ஆர்.எஸ் ராஜன் பாராட்டு


கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயிலின் சுற்றுப்புறங்களில் ஏராளமான குப்பை கூளங்கள் குவிந்து கிடந்தது குறித்து நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கவனத்திற்கு புகைப்படங்கள் ஆதாரத்துடன் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் மனு அளித்தார்.


இது குறித்து  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உடனடியாக துப்புரவு ஊழியர்களை அங்கு அனுப்பி அனைத்து குப்பைகளையும்  சுத்தம் செய்ய உத்தரவிட்டார்.


அதன்படி அங்கிருந்த குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.


இச்செய்தி அறிந்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கோவில் சுற்றுப் புறங்களை சுத்தம் செய்ய ஆவண செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகத்தை தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் பாராட்டினார்


கன்னியாகுமரி மாவட்ட,செய்தியாளர் என்.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad