நாசரேத்,மார்ச் 12, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் ஓவியப்போட்டி மற்றும் ஓவிய கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை தாங்கினார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டது.
ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இயற்கையை காப்போம் என்ற தலைப்பிலும், ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு ஆகிய தலைப்பிலும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலைகள் என்ற தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள், தாங்கள் வரைந்த ஓவியங்களை காட்சிப்படுத்தினர்.
ஆறாம் வகுப்பு மாணவர்கள் 47 பேர், ஏழாம் மாணவர்கள் 51 பேர், எட்டாம் வகுப்பு மாணவர்கள் 84 பேர் என மொத்தம் 182 மாணவர்கள் ஓவியப்போட்டி மற்றும் கண்காட்சியில் பங்கு பெற்றனர். ஆசிரியைகள் அருள்ராணி, குணசீலி, ஆசிரியர்கள் கிறிஸ்டோபர், நேசகுமார், ஜெயகுமார், ஜெய்சன் பாபு ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்த ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் ஐந்து பரிசுகளும், ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன. பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் குணசீலராஜ், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், ஆசிரியர் தனபால்,தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், அறிவியல் ஆசிரியர்கள் ஜென்னிங்ஸ் காமராஜ், ஐசக் சந்தோஸ் பிரபு, கணித ஆசிரியர் ஜெயகுமார் டேவிட், நிர்வாகப் பிரிவு ஆசிரியர்கள் ஜெபனேசன் மற்றும் பாரத் சிசிமியோன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக