முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலாகும். இந்தகோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கிய விழாவான மாசி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. மாசி திரு விழாவையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். அவர்களுக்கு பல்வேறு அமைப்பினரும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக அவை தலைவர் சதீஷ் தனது பெற்றோர் செல்வராஜ், இந்துமதி அம்மாள் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கினார். உடன்குடி சல்மா பள்ளி அருகே அன்னதான நிகழ்ச்சியை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சித்திரை ராஜ் தொடங்கி வைத்தார்.
இதில் 2000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு வெஜிடபிள் பிரியாணி ,சாம்பார் சாதம் ,கேசரி என அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அவைத் தலைவர் சதீஷ் மற்றும் குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக