அலங்காநல்லூர் அருகே காதல் மனைவியை தவறாக பேசியதால் நண்பர்களுடன் சேர்ந்து நண்பனையே வெட்டி கொலை செய்ததாக கைதான சுந்தர் ராஜா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 14 மார்ச், 2025

அலங்காநல்லூர் அருகே காதல் மனைவியை தவறாக பேசியதால் நண்பர்களுடன் சேர்ந்து நண்பனையே வெட்டி கொலை செய்ததாக கைதான சுந்தர் ராஜா


அலங்காநல்லூர் அருகே காதல் மனைவியை தவறாக பேசியதால் நண்பர்களுடன் சேர்ந்து நண்பனையே வெட்டி கொலை செய்ததாக கைதான சுந்தர் ராஜா மற்றும் நண்பர்கள் காவல்துறையில் வாக்குமூலம் குற்றவாளிகளை கைது  செய்த அலங்காநல்லூர் காவல்துறையினர் மேலும் அவர்களிடம் விசாரணை.


மதுரை மாவட்டம்  அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் கமலேஷ் (வயது 24) இவர் கோவையில் உள்ள ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில்  வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதுரை வந்த கமலேஷ் மாலையில்  சிக்கந்தர் சாவடி -அலங்காநல்லூர் மெயின்ரோட்டில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஒருவருக்கொருவர் வாய்
தகராறு ஏற்பட்டதில் சாலையின் நடுவே கமலேஷை  சரமாரியாக கத்தியால்  குத்தியும் வெட்டியும் சாய்த்து விட்டு தப்பியோடினர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலே கமலேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த அழகுராஜேஸ் சுந்தர் ராஜா சந்தன கருப்பு சேது
உயிரிழந்தகமலேஷ் ஆகிய அனைவரும்  நண்பர்களாக இருந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு சுந்தர் ராஜா  என்பவர் தனது அத்தை மகளை காதல் திருமணம் செய்துள்ளார் இந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் மது அருந்திய போது கமலேஷ் என்பவர் சுந்தர் ராஜா என்பவரின் மனைவியை தவறாக பேசியுள்ளதாக தெரிகிறது இதனால் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் ஏற்பட்டதில் மது போதையில் கோபம் தலைக்கு ஏறிய நிலையில் சுந்தர் ராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து கமலேசை கக்தியால் குத்தி கொலை செய்ததாக காவல்துறை விசாரணையில் கூறியதாக தெரிகிறது.

இதன் அடிப்படையில் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த கமலேசின் நண்பர்களான அழகு ராஜேஷ் சுந்தர் ராஜா சந்தன கருப்பு சேது ஆகிய நான்கு நபர்களை கைது செய்து அலங்காநல்லூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் இதில் சுந்தர் ராஜா தாழ்த்தப்பட்ட வகுப்பு சேர்ந்தவர் என்பதும் கமலேஷ் பிற மலைக்கள்ளர் வகுப்பை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்

ஆகையால் ஜாதி ரீதியான மோதலாக உருவெடுக்க வாய்ப்பு இருப்பதால் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து சட்டம் ஒழுங்குபிரச்சனை ஏற்படா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad