இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஸ்கேன் செய்வதற்கு பணம் செலுத்தும் முறையை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தலைக்கயம் மற்றும் உடல் பரிசோதனை சிகிச்சைக்காக எம்ஆர்ஐ ஸ்கேன் எடுப்பதற்காக ரூபாய் 500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது இதற்காக ஆன்லைன் இணையதள சேவை மூலமாக மட்டுமே பெற்றுக் கொள்ளும் வசதிகள் உள்ளன மொபைல் போன் gpay.phonepy மூலமாக மட்டுமே செலுத்த முடியும் மொபைலில் இணையதள சேவை இல்லாமல் எத்தனையோ நடுத்தர வசதிகள் இல்லாத மக்கள் உள்ளனர் அவர்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தி ஸ்கேன் செய்ய அடுத்தவர்களை நாட வேண்டிய நிலை உள்ளது இதன் காரணமாக நோயாளிகளுக்கு ஸ்கேன் எடுப்பதற்கான உரிய கட்டணம் செலுத்த முடியாமல் (நோயாளிகள் மேல் சிகிச்சை செய்வதற்கு பாதிப்பு ஏற்படுகிறது) மேலும் நோயாளிகளுக்கு மன சோர்வு அழுத்ததை ஏற்படுகிறது எனவே ஆன்லைனில் பணம் கட்டும் முறையை மாற்றியமைத்து கட்டணமாக (பணம்) செலுத்தும் முறையை நடைமுறை படுத்தவேண்டும் என மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு நோயாளிகளின் உறவினர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக