திருமங்கலம் அருகே இடத்து பிரச்சினை காரணமாக கிராம நிர்வாக அலுவலர் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை முயற்சி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 13 மார்ச், 2025

திருமங்கலம் அருகே இடத்து பிரச்சினை காரணமாக கிராம நிர்வாக அலுவலர் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை முயற்சி.


திருமங்கலம் அருகே இடத்து பிரச்சினை காரணமாக கிராம நிர்வாக அலுவலர் தலையில் அம்மி கல்லை போட்டு கொலை முயற்சி.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மேல உரப்பனூர் கிராமத்தில் முத்துப்பாண்டி (45)கிராம நிர்வாக அலுவலராக பனியாற்றி வருகிறார். திருமங்கலம் முன்சீப் கோர்ட் ரோடு பானு தியேட்டர் அருகில் ஒரு வசித்து வருகிறார்.சிலமாதங்களுக்கு முன்பு திருமங்கலம் மம்சாபுரத்தை தெருவை சார்ந்த சம்ரத்பீவி(42) இவருக்கு இரண்டு மகன்கள் ரபீக் ராஜா (19) முகமது ஹாசின்(16) உடன் இடம் பதிவு செய்து பட்டா வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார் அங்கே அவர் இந்த இடத்திற்காக பட்டா தர முடியாது என்று தகாத வார்த்தையால் கூறியுள்ளார்.இதனால் உடன் சென்ற மகன்கள் ஆத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பாண்டி வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளனர். திறக்கவில்லை மீண்டும் தட்டிஉள்ளனர் அவரது மனைவி கதவை திறந்து உள்ளார் அவரை அங்கே தள்ளி விட்டு தூங்கி கொண்டு இருந்த அதிகாரியை அருகில் இருந்த அம்மி கல்லை எடுத்து இரண்டு பேரும் சேர்ந்து தாக்கினர் இதனால் காயமடைந்த முத்துப்பாண்டி  நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார்.தகவல் அறிந்து வந்த போலீசார் கிராம நிர்வாக அலுவலரை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அவருக்கு தலையில் பலத்த ரத்த காயத்துடன் இருந்தார்.தாக்ப்பட்ட இரண்டு பேர்களையும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad