இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 28 மார்ச், 2025

இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

 


இராமநாதபுரம் பழைய பேருந்து  நிலையத்தில்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு 


இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்  பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து  அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்துவதற்காக வேகத்தடை அமைத்தல், சரியான  விதிமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பற்றி அவர் விரிவான ஆலோசனை செய்தார். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் சீரான போக்குவரத்து முன்னேற்றத்திற்காக காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


மேலும், முக்கிய பகுதியில் CCTV Camera அமைப்பது, போக்குவரத்து காவலர்களின் பணிகளை மெருகூட்டுவது போன்ற முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad