வேலூர் , மார்ச் 4 -
வேலூர் மாவட்டம் ரியல் எஸ்டேட் செய்வதாக கூறிக் கொண்டு கொடி கட்டி பறக்கிறது விபச்சார தொழில். வேலூர் வள்ளலார் பகுதியில் வசிப்பவர் பானுப்பிரியா (வயது 31) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக பலரை வீட்டுமனை மற்றும் நிலம் ஆகியவற்றை விற்பனை செய்வதாகவும், பழைய மற்றும் புதிய வீடுகளை வாங்குவது, விற்பது என்று தொழில் செய்து வருவதாக வெளியில் கூறிக்கொண்டு பலரை நம்ப வைத்து ஏமாற்றி நாடகம் ஆடி வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இவர் ரியல் எஸ்டேட் செய்வதாக கூறிக்கொண்டு யார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைக்கிறார்களோ அவர்களை நாடிச் அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறார் இவர். இந்த விபச்சார தொழிலில் தலைவியாக (பெண் தாதா) செயல்பட்டு வருகிறார். இவரது கஸ்டடியில் சுமார் 20க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் கைவசம் வைத்துக் கொண்டுள்ளார். இவர்களையும் இந்த தொழிலில் ஈடுபடுத்தி ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.5,000 வரையும் வெளியில் அழைத்துச் செல்பவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வரையிலும் வசூல் செய்கிறார் என்று கூறப்படுகிறது. பணம் பணம் என்று திரிவதாக கூறப்படுகிறது. இவ்வாறு இந்த தொழில் அமோகமாக நடைபெறுகிறது. ஆனால் வெளியில் சொல்வது என்னமோ ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறிக்கொண்டு இந்த இளம் பெண்களை அழைத்துக் கொண்டு இவர் வலம் வந்து கொண்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இவர் மீது வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சத்துவாச்சாரி காவல் நிலையங்களில் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக இவரால் பாதிக்கப்பட்ட சில நபர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பணம் பறிப்பதை ஒன்றையே தொழிலாகக் கொண்டு இவர்கள் செயல்படுவதாகவும் தெரிய வருகிறது, கூறப்படுகிறது. இவர் கணவனை பிரிந்து தனது இரண்டு குழந்தைகளோடு ஒரு மகன், ஒரு மகளோடு வசித்து வருவதாக கூறப் படுகிறது. ஆனால் இவர் செய்யும் தொழிலோ இப்படி ஒரு விரும்பத்தகாத பாலியல் தொழில் என்று தெரியவந் துள்ளது. வேலூரில் தற்போது எளிதில் சம்பாதிக்க இந்த விபச்சார தொழிலை பயன்படுத்திக் கொண்டு இவர் ஹாயாக வலம் வந்து கொண்டுள்ளதாக கூறப் படுகிறது. குறிப்பாக இவர் ஆட்டோ மற்றும் கார்களில் மட்டுமே பயணம் செய்வாராம். மற்ற எந்த வாகனங் களிலும் குறிப்பாக இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வது இல்லை என்றும் கூறப்படுகிறது. பல குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் இவரிடம் சிக்கி சின்னா பின்னம் ஆவதற்குள்ளாக காவல்துறை முந்திக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர் பார்த்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக