குடியாத்தம் ,மார்ச் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாரதி தமிழ் சங்கம் சார்பில் , போக்குவரத்து சாலையில் சிக்னல் அமைப்பது குறித்து வழக்கறிஞர் எஸ் எஸ் ரமேஷ் குமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் குமாரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்
அதில் , குடியாத்தம் பெரும்பாடி ரோட்டில் இருந்து காமராசர் பாலம் வரை , கவுண்டன்யா மகாநதி ஆற்று ஓரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு , புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது .
இதன் வழியாக பஸ் கார் ஆட்டோ ஆகியவை சென்று வருகிறது எனவே பெரும்பாடி கூட்ரோடு சந்திப்பு , காமராசர் பாலம் சந்திப்பு, அண்ணா சிலை அருகே உள்ள 5 முனை ரோடு , கன்னிகாபுரம் கூட்ரோடு , ஆகிய பகுதிகளில் போக்கு வரத்து சிக்னல் அமைக்க வேண்டும் .
சிக்னல் இல்லாததால் அவ்வபோது சிறிய விபத்துக்கள் ஏற்படுகிறது இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப் படுகின்றன மேலும் நெல்லூர் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் வேகத்தடை அமைக்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிட்டு இருந்தது
இதனை மனுவைப் பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் முகேஷ் குமார் இது குறித்து மாவட்ட காவல் அலுவலகத்தில் கவனத்திற்கு கொண்டு சென்று கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் அப்போது சமூக ஆர்வலர்கள் ரமேஷ் , சரவணன் , மோனிஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர் மேலும் இது குறித்து மாவட்ட எஸ்பி மதிவாணன் விசாரித்து வருகிறார் குடியாத்தத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையில்
போக்குவரத்து சிக்னல் அமைக்க கோரிக்கை மனு , குடியாத்தம் பாரதி தமிழ் சங்கம் சார்பில் போக்குவரத்தை இன்ஸ்பெக்டர் முகேஷ் குமாரிடம் நிர்வாகிகள் வழங்கினார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக