திருமண விழாவிற்கு வருகை தந்த சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 10 மார்ச், 2025

திருமண விழாவிற்கு வருகை தந்த சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

 


திருமண விழாவிற்கு வருகை தந்த சுற்றுலா வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 


நீலகிரி மாவட்டம் கூடலூர் தவளைமலை பகுதியில் பள்ளத்தில் உருண்டோடி வேன் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.


ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியிலிருந்து கூடலூர் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 500 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்பு பணியினர் கயிறு கட்டி மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து நடுவட்டம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad