தாராபுரம் நகர திமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 24 மார்ச், 2025

தாராபுரம் நகர திமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி


தாராபுரம்,தாராபுரம் தி.மு.க. 17 -வது வார்டு சார்பில் ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி வார்டு செயலாளர் பச்சா என்ற செய்யது ரியாசு தீன், வார்டு கவுன்சிலர் ஷாஜிதா அகமது பாஷா தலைமையில் மாரியம்மன் கோவில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், சட்டமன்றத்தொகுதி பொறுப்பாளர் கணேசன், நகர செயலாளர் முருகானந்தம், நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், ஒன்றிய செயலாளர் செந்தில் குமார் மற்றும் ஜமாத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு பேசி னார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் கமலக்கண்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad