கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,
புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக பூதப்பாண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் இறச்சகுளம் பகுதியை சேர்ந்த தாதேயு என்பவரின் மகன் அபிஷேக்(19) வடசேரி பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் பாலாஜி(20) திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த அருமராஜ் மகன் அன்பு(42) பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விற்பனை செய்ய வைத்திருந்த 100 கிராம் எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட இளைஞர்கள் போதை பாதையை தவிர்த்து வெற்றி பாதையில் பயணித்து வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என மாவட்ட காவல்துறை சார்பாக அறிவுறுத்தினர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
என்.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக