விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி மின்னல் தாக்கி உயிரிழப்பு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 21 ஏப்ரல், 2025

விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி மின்னல் தாக்கி உயிரிழப்பு.

விளாத்திகுளம் அருகே 17 வயது சிறுமி மின்னல் தாக்கி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குரளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகள் (வயது 17) 
முத்துகௌசல்யா விளாத்திகுளத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் பொது தேர்வுகள் முடிந்ததை தொடர்ந்து விடுமுறையில் தற்போது வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த காரணத்தினால் தனது வீட்டின் அருகில் காய வைக்கப்பட்டிருந்த மிளகாய் பழங்களை மலையில் நனைய விடாமல் இருப்பதற்காக தார்ப்பாய் கொண்டு மூடுவதற்காக அங்கு சென்ற அச்சிறுமி முத்துகௌசல்யா திடீரென மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக முத்து கௌசல்யாவை விளாத்திகுளம் அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் மருத்துவமனையில் சிறுமி முத்து கௌசல்யாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர் 

அதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் உட்பட உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்து அனைவரையும் கண்கலங்க செய்தது மேலும் இது குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுமி முத்து கௌசல்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது இது தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad