தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் பேருந்து நிலையம் முன்பு மாவீரன் சுந்தரலிங்கனார் புகழ் வணக்க விழா தமிழர் விடுதலைக் களம் நிறுவனர் பா. ராஜ்குமார் ஆலோசனையின்படி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் கலந்து கொண்டு சுந்தரலிங்கனார் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இவ்விழாவில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், தமிழர் விடுதலை கழகம் நகர செயலாளர் மகாராஜன், ஒன்றிய செயலாளர் முத்து கிருஷ்ணன், நிர்வாகி வெற்றிச்செல்வம், விளாத்திகுளம் பாரதி தெரு தலைவர் பாலன், சோலையப்பன் மற்றும் விளாத்திகுளம் வட்டார தேவேந்திர குல இளைஞர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக