ரூபாய் 31 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி மூலமாக திறப்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 5 ஏப்ரல், 2025

ரூபாய் 31 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி மூலமாக திறப்பு!

ரூபாய் 31 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொளி மூலமாக திறப்பு!

ராணிப்பேட்டை, ஏப் 05 -

 ராணிப்பேட்டை மாவட்டம் வெங்குபட்டு கிராமத்தில் ரூ.31 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத் ததை அடுத்து மக்களுக்கு இனிப்புகள் வழங்கி வகுப்பறைகள் திறக்கப்பட்டது
இராணிப்பேட்டை மாவட்டம் வெங்குபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட எம் பி குப்பம் பகுதி யில் 40 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டு சேதமான அரசு  தொடக்கப்பள்ளி கட்டிடத் தை அகற்றிவிட்டு  புதிதாக 31 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறை கொண்ட கட்டிடம் கட்டப்பட்டது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து கட்டிடத்தை பயன் பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி பள்ளி உதவி ஆசிரியர் உமா தலைமை யில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு  ஊராட்சி மன்ற தலைவர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர் 

ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad