நகராட்சி கூட்ட அரங்கில் சதாரன‌ கூட்டம் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் 60 தீர்மானங் கள் முன்வைத்து கூட்டம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 8 ஏப்ரல், 2025

நகராட்சி கூட்ட அரங்கில் சதாரன‌ கூட்டம் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் 60 தீர்மானங் கள் முன்வைத்து கூட்டம்!


சோளிங்கர், ஏப் 08 -

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சி கூட்ட அரங்கில்  சதாரன‌ கூட்டம் நகராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் 60 தீர்மானங் கள் முன்வைத்து கூட்டம் நடைபெற்றது. ஆணையர் பொறுப்பு பிரீத்தி, துணை தலைவர் பழனி, பொறியாளர் ஆசிர் வாதம் ஆகியோர் முன்னில வகித்தனர்.
எட்டாவது வார்டு உறுப்பினர் டி.கோபால்  பேசும் போது சோளிங்கர் நகராட்சியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத் தின் இடத்தை சர்வே செய்துஆக்கிரமிப்பு களை அகற்றி பேருந்து நிலையத்தின் வரைப்படத்தை நகர மன்ற உறுப்பினர் களிடம் ஒப்புதல் தீர்மானம் பெற்ற
பின்னர் பணி துவங்க வேண்டும்.கோடை
காலம் என்பதால் பேருந்து நிலையத்தில் தற்காலிக நிழற்குடை மற்றும் குடிநீர் அமைக்க வேண்டும் சோளிங்கர் நகராட்சி யில் அனுமதி இன்றி  பேனர்களை  வைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சோளிங்கர் நகராட்சியில் குற்றங்களை கட்டுப்படுத்தவும்,குற்ற சம்பவங்களை கண்காணிக்கவும், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் முக்கிய இடங்களில் அதிநவீன சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும்.சோளிங்கர் நகராட்சியில் அமைந்து உள்ள அப்பங்கார குளம்  பகுதியில் உள்ள  ஆதிதிராவிட மாணவர்கள் தங்கும் விடுதி பயன் பாட்டில் இல்மையால்  உள்ளது. அதை அரசிடம் அனுமதி பெற்று இடிக்க வேண்டும்.மற்றும் அதே பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை கையகப்படுத்தி உள் விளையாட்டு கூடம், உடற்பயிற்சி கூடம் அமைக்க வேண்டும்.சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் குப்பைகளை அள்ள போதுமானமாக
ஆட்களை நியமித்து நகரத்தை சுத்தமாக வைத்துகொள்ள வழி வகை செய்ய வேண்டும்.கட்டி முடாக்கப்பட்ட மின் தகன மேடை  ஒப்பந்த முறையில் விடாமல் நகராட்சி நிர்வாகமே செயல்படாத்த வேண்டும்.சோளிங்கர் நகராட்சியில் சித்திரை திருவிழா தொடங்க உளாள தால்  கோயிலுக்கு வரும் பொது மக்களின் நலன் கருதி தற்காலிக கழிப்பிடம்.குடிநீர் வசதி மற்றும் பொது மருத்துவம் ஆகியவற்றை செய்ய வேண்டும். சோளிங்கர் நகராட்சியில் உள்ள தக்கான் குளம் அருகில்  இந்துக் கள் நடத்தும் பித்துருக்களுக்காக செய்யும் தர்பணம் ஆகியவற்றை மழை காலங்களில் தடைஇன்ற நடத்த நிழற்
 கூடம் நகராட்சி சார்பில் அமைத்திட வேண்டும். சோளிங்கர் நகராட்சியில் உள்ள அணைத்து  மயானங்களை  சர்வே செய்து மின்சாரம் மற்றும் குடிநா வசதி செய்திட வேண்டும் என பேசினார்.
ஐந்தாவது வார்டு உறுப்பினர் ஆஞ்சநேயன் பேசும்போது ஐந்தாவது வார்டு பில்லாஞ்சி பகுதியில் பல்வேறு இடங்களில் மின்விளக்குகள் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்படு கின்றனர். பொதுமக்கள் நலன் கருதி புதிய  மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பா வடிவில் கடைகள் அமைக்க வேண்டும். பயணிகள் நலன் கருதி பேருந்து நிலையத்தின்  மையப் பகுதியில் பயணிகள் அமர்வதற்கு ஏற்றார் போல் கட்டுமான பணிகள் செய்ய வேண்டும் . வரும் கோடைகாலம் முன்னிட்டு நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி வழங்க வேண்டும் குடிநீர் பைப் லைன் உடைப்புகள் ஏற்பட்டால் உடனுக்குடன் சீரமைத்து தங்கு தடை இன்றி குடிநீர் வழங்க வேண்டும்.நகராட்சி உட்பட்ட பகுதிகளி லிருந்து வெளியேறும் கழிவு நீர் சுத்தகரிப்பு செய்யாமல் நேரடியாக நந்தியாற்று கால்வாயில் விடப்படுகிறது இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது இதை தவிர்க்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்.பொன்னை ஆற்றில் இருந்து பைப் லைன் வழியாக சோளிங்கர் நகராட்சிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 48 கோடி மதிப்பில் பைப்லைன் புதைக்கும் பணிகள் இரண்டு வழி சாலையின் ஓரத்தில் பைப்லைன் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது இந்த சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது எதிர் வரும் காலங்களில் கனரக வாகனங்கள் சென்று பைப் லைன் உடைப்பு ஏற்பட்டால் குடிநீர் முறையாக வழங்கப்படுமா அதனை ஆய்வு செய்து  பைப் லைன் மாற்றி அமைக்க  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள குப்பைகளை முறையாக  அள்ளாமலும் , குப்பைகளை தரம் பிரிக்காமல் சில பகுதிகளில் கொட்டி எரிப்பாதல்  சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் இதனை நகராட்சி நிர்வாகம் முறையாக ஆய்வு செய்து கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைகளை முறையாக தரம் பிரிக்க வேண்டும் என பேசினார்.17 வது வார்டு உறுப்பினர் அன்பரசு பேசும்போது பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை வாடகைக்கு  எடுத்தவர்களுக்கு  புதிய பேருந்து நிலையம் அமைத்த பின்பு மீண்டும் தடைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின்விளக்கு பராமரிப்பு பணிகளை ஒப்பந்ததாரத்துக்கு வழங்காமல் நகராட்சி நிர்வாகமே பராமரிக்க வேண்டும். வீட்டு வரி தொழில் வரி சொத்து வரி உள்ளிட்டவர்களை முகவரி தவறுதலக  கணிணியில் பதிவேற்றம் செய்து உள்ள பதிவுகளை முறையாக மாற்றி பழைய முகவரிக்கு ரசித்து வழங்க வேண்டும்.நகராட்சியில் டெண்டர் விடப்பட்ட பணிகள் குறித்த காலத்தில் முடிக்க வேண்டும் .24 வது வார்டு உறுப்பினர் அருண்ஆதி பேசும் போது சாலையிலும் தெருக்களிலும் பைப் லைன் பணிகள் நடைபெற்று வருகிறது .பைப் லைன்கள் அமைக் கப்பட்ட உடன் சாலையை சீரமைக்க வேண்டும்.பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதிகள் செய்தர தெரிவித்தால் அதனை நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி உடனுக்குடன் பணாகளை செய்து தர வேண்டும்.முன்னதாக ஏழாவது வார்டு பகுதியில் ஏழரை லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கால்வாய் கட்டுவதற்கு ஏதுவாக கால்வாய் மீது கட்டப்பட்டுள்ள படிகட்டுகள் சாய்வுதளங் களை  அகற்ற நகராட்சி நிர்வாகம் முறையாக நோட்டீஸ் வழங்கியும் பணியை செய்ய விடாமல் அலட்சியம் காட்டி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து திமுகவை சேர்ந்த  வார்டு கவுன்சிலர் மோகனா சண்முகம் கூட்டத்தை புறக்கணித்து வழிநடப்பு செய்தார்.கூட்டம் முடிவில் நகராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வி பேசும்போது சோளிங்கர் நகராட்சி முன்மாதிரி நகராட்சியாக கொண்டு வர கவுன்சிலர் கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் . நகராட்சி கவுன்சிலர்கள் வைத்த கோரிக்கைகளை ஒவ்வொன் றாக ஆய்வு செய்து அதற்கு உண்டான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அப்போது நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஆனந்தன்ஆய்வாளர் மனோஜ் குமார், சுகாதார ஆய்வாளர் தேவிபாலா மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


 ஒருங்கிணைந்த சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad