தானிஷ் அஹமது தொழில்நுட்ப கல்லூரியின் 8-வது ஆண்டு பட்டமளிப்பு விழா - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 14 ஏப்ரல், 2025

தானிஷ் அஹமது தொழில்நுட்ப கல்லூரியின் 8-வது ஆண்டு பட்டமளிப்பு விழா

 


கோவை அருகே கேஜி சாவடியில் உள்ள தானிஷ் அஹமது தொழில்நுட்ப கல்லூரியின் 8-வது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கருத்தரங்கு கூடத்தில் இன்று (13-04-25, ஞாயிற்றுக்கிழமை) காலை 11மணி அளவில் நடந்தது. விழாவுக்கு கல்லூரி இயக்குனர் அக்பர் பாஷா தலைமை தாங்கினார். கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி தமீஸ் அகமது முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் K.G.பார்த்திபன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக  டாக்டர்.சுரேஷ் சீதாராமன், சக்ஸஸ் சைலோர் எஜீகேஷன்  டெக்னாலஜி, Co-Founder லண்டரோடிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் செல்வி.ராதிகா ரவி, கேம்பஸ் ஹிரிங் நேஷனல் ஹெட் WIPRO கலந்து கொண்டு 150க்கும் மேற்பட்ட  மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் அவர் அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தங்க பதக்கம் வென்ற மாணவி  H.AFLAH மற்றும்  அண்ணா பல்கலைக்கழக தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார். அவர் பேசுகையில்,

            

இந்தியாவில் உள்ள 150கோடி மக்களில் 4கோடி பேர்தான் உயர்கல்விக்குள் நுழைகிறார்கள். தமிழக பெற்றோர்கள் தங்கள் வீடுகள், விவசாய நிலங்களை அடமானம் வைத்தாவது தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad