கோவை தானிஷ் அஹமது தொழில் நுட்பக் கல்லூரியின், ஆண்டு விழா, 12.04.2025 அன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக திரு.நந்தா கோபாலகிருஷ்ணன், செல்வி.பூஜா சங்கர் பிரபல யூட்டுபர், சூப்பர் சிங்கர் செல்வி. அபர்ணா நாராயணன், திரு.மதன் குமார் பின்னணி பாடகர் மற்றும் திரு.கான சக்தி ஆகியோர் கலத்து கொண்டனர்.
விழாவில், சிறந்த மாணவ, மாணவிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் இயக்குனர் திரு. கே.ஏ. அக்பர் பாஷா அவர்கள் தலைமை வகிர்த்தார், கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி திரு. ஏ.தமீஸ் அகமது அவர்கள் முன்னிலை வகிர்த்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் கே.ஜி.பார்த்திபன் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார். இந்தாண்டுற்கான சிறந்த மாணவராக உணவு தொழில்நுட்பம் துறை மாணவி செல்வி. சாந்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை பேராசிரியர்கள் திரு. குணசேகரன் , திரு. ராஜ்குமார் மற்றும் மாணவர்கள் சிறப்புற செய்து இருந்தனர்.
இச்செய்தி குறிப்பினை தங்கள் நாளிதழில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் கலைவாணி மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக