ஆழ்வார்திருநகரியில் இருந்து ஆழ்வார்தோப்பு செல்லும் பாலம் அருகில் விபத்து ஏற்படா வண்ணம் நான்கு இடங்களில் வேகத்தடைகள் மற்றும் தடுப்புகள் அமைத்து தர வேண்டி ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி கோரிக்கை மனு வைத்தார்.
அதன் அடிப்படையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் உடனடியாக செயல்பட்டு, தற்காலிக தடுப்புகள் அமைத்து ஒரு வார கால சோதனைக்கு பின் நிரந்தர தடுப்பாக அமைத்துத் தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
நேற்று 24.04.2025 முதல் சோதனை தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. எனவே பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்து ஏற்பட வண்ணம் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், விரைந்து பணிகளை மேற்கொள்ளும் நெடுஞ்சாலை துறையினருக்கும், ஆழ்வார்திருநகரி சுற்று வட்டார பொதுமக்கள் சார்பாக பேரூராட்சி தலைவி நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக