போக்குவரத்து துறை காவல் நிலையத் தில் வியாபாரிகள் பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுநர் சமூக ஆர்வலர்கள் கலந்தாய்வு கூட்டம்!
குடியாத்தம் , ஏப் 19 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் போக்கு வரத்து காவல் நிலையத்தில் இன்று காலை புறவழி சாலை மற்றும் போக்கு வரத்து குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு போக்கு வரத்து காவல் ஆய்வாளர் முகேஷ் குமார் தலைமை தாங்கினார் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சாமி கண்ணு வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் துணை காவல் கண்காணிப் பாளர் ராமச்சந்திரன் நகர மன்றதலைவர் எஸ். சௌந்தர்ராஜன் நகராட்சி ஆணை யாளர் மங்கையர்க்கரசன் தேசிய நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா நகர மன்ற உறுப்பினர் லாவண்யா குமரன் லைஸ் கிளப் தலைவர் பாபு மற்றும் பொன்னம் பலம் ஆகியோர் பங்கேற்றனர் இதில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள புறவழி சாலையில் போக்குவரத்தை குறித்தும்
விபத்துக்கள் ஏற்படுவதை குறித்தோம் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்
இதில் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் கனரக வாகன உரிமையாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக