உதகையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
தமிழக பத்திரிகையாளர் சங்கம் மற்றும் கோவை KMCH மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகமானது இன்றைய தினத்தில் (20.4.2025 ஞாயிறு )காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி
வரை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்த மாபெரும் இலவச சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்ட கோட்டாட்சியர் திரு. சதீஷ் மற்றும் நீலகிரி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் மற்றும் பள்ளியின் தாளாளர் திரு. கட்டாரியா அவர்கள் மற்றும் ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் நீலகிரி மாவட்ட தமிழக பத்திரிகையாளர் சங்கத்தை சார்ந்த மாநில தலைவர் திரு. ஹரிஹரன் பொதுச்செயலாளர் திரு. பாஷா நீலகிரி மாவட்ட தலைவர் திரு. சகாயராஜ் செயலாளர் திரு. ஜெரால்டு பொருளாளர் திரு. மகேந்திரன் மற்றும் அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் KMCH மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் குழு மருத்துவ உதவியாளர்கள் குழு மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தி ஒருங்கினைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக