குடியரசு தலைவர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மேலானவர் என்று பார்க்க முடியாது! திருமாவளவன் பேட்டி!
ராணிப்பேட்டை , ஏப் 20 -
குடியரசு தலைவர் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மேலானவர் என்று பார்க்க முடியாது ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேட்டி.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை அடுத்த பாரதிநகர் பகுதியில் தனியார் விடுதியில் தங்கி இருந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்தித்து கூறுகையில்,உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பு. பெரும் பான்மை என்ற பெயரால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு குந்தகம் விளை விக்கும் வகையில் நாடாளுமன்றத்தை ஆளுங்கட்சியினர் பயன்படுத்துகின்ற போது ஜனநாயகம் மற்றும் அரசியல மைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கு உள்ளது.இதனை ஏற்றுக் கொள்வதும் உள்வாங்கிக் கொள்வதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு நாம் செலுத்துகின்ற மரியா தையாக இருக்க முடியும்.குடியரசு தலைவர்கள் உட்பட அனைவருமே அரசியல் அமைப்பு சட்டத்திற்கு கட்டுப் பட்டவர்கள். அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து வரும்போது அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பில் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையை அனைத்து குடிமக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சரியாக இருக்கும்.எல்லாவற்றிற்கும் மேலானவர் குடியரசு தலைவர் அரசியலமைப்பு சட்டத்திற்கு மேலானவர் என்று பார்க்க முடியாது. உச்ச நீதி மன்றத்திற்குமேலான வர் குடியரசு தலைவர் என விவாதிடலாம் ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு மேலானவர் என சொல்ல முடியாது.
அரசியல் அமைப்பு சட்டத்தை சீர்குலைக் கும் வகையில் முயற்சி நடைபெறும் போது குடியரசுத் தலைவர் தலையிட்டு செய்து இருந்தால் இப்படிப்பட்ட சட்டத்தை ஏற்க முடியாது, அங்கீகரிக்க மாட்டேன் என்று அவர் தனது பொறுப்பை தட்டிக் கிழிக்காமல் இருந்திருந்தால் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு இருக்காது, தலையிட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டு இருக்காது.குடியரசு தலைவர் தனது கடமையை செய்ய தவறி விட்டதால் ஆளுங்கட்சி பெரும்பான்மை இருப்பதன் காரணமாக என்ன சட்டம் இயற்றப் பட்டாலும் அதனை அங்கீகரிக்கும் கடமையை கொண்டிருந்தால் அரசியல் அமைப்பு சட்டம் கேலி கூத்தாகிவிடும் என்று கூறினார் ..
சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக