தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே துளிர் திறனறிதல் தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 22 ஏப்ரல், 2025

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே துளிர் திறனறிதல் தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  அரசு பள்ளி மாணவர்களுக்கிடையே  துளிர் திறனறிதல் தேர்வு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா!
காட்பாடி , ஏப் 22 -


வேலூர் மாவட்டம் காட்பாடி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் காங்கேயநல்லூர் அரசு பள்ளியில் துளிர் திறனறிதல் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.மாணவர்களிடையே அறிவியல் கண்ணோட்டத்தை அதிகப் படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டுதோறும் துளிர் திறனறி தல் தேர்வை நடத்ததிவருகிறது.  26வது ஆண்டாக இந்த ஆண்டு வேலூர்மாவட்டத் தில் துளிர் திறனறிதல் தேர்வு 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 15 மையங் களில் நடைபெற்றது. 

 
இதில் இயற்பியல், வேதியில், உயிரியில், மரபுசார் அறிவியல், புதிர்க் கணக்குகள், அறிவியல் மனப்பான்மை, சமூக அறிவியல்  துளிர் கட்டுரைகள், தற்கால நிகழ்வுகள், அறிவியல் தொழில்நுட்பம், சொற்சுருக்கம, சிந்திக்கும் திறனையும் காரண காரியங்களையும் அறியும் திறனையும் சோதிக்கும் வகையில் நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா காங்கேயநல்லூர் திருமுருக கிருபானந்த வாரியார் அரசினர்ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமையாசிரியர் அ.சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், திருப்பத்தூர் மாவட் நிர்வாககுழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற தலைமையா சிரியர் என்.கருனாநிதி ஆகியோர் சான்றி தழ்களை வழங்கி பாராட்டி பேசினர்.முன்னதாக பள்ளியின் உதவி தலைமையாசிரியர் எம்.கீதா வரவேற்று பேசினார்.  உடற்கல்வி ஆசிரியர் தினகரன் ஒருங்கிணைத்தார். மாவட்ட தலைவர் பே.அமுதா, மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் என்.கோட்டீஸ்வரி, துணைத்தலைவர் கே.விசுவநாதன், ஆர்.காயத்ரி பொருளாளர் வீ.குமரன் வேலூர் கிளை செயலாளர் முத்து சிலுப்பன் , ப.சேகர், பி.ஹேமலதா, த.கனகா ஆகியோர் உரிய ஏற்பாடுகளை செய்திருந்தனர்

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad